தொல்பொருள் காட்சிச்சாலை, வவுனியா
வவுனியா தொல்பொருள் காட்சிச்சாலை அல்லது வவுனியா தொல்லியல் அருங்காட்சியகம் இலங்கை வட மாகாணத்தின் தெற்கு எல்லையை அண்டி அமைந்துள்ள வவுனியா நகரில் உள்ள அருங்காட்சியகம் ஆகும். இது இலங்கைத் தொல்பொருள் திணைக்களத்தினால் நிறுவப்பட்டது. இந்தப் பிரதேச அருங்காட்சியகத்தில் வவுனியாவிலும் அதைச் சார்ந்த பகுதிகளிலும் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள தொல்பொருட்கள் ஐந்து முதல் எட்டாம் நூற்றாண்டு காலப்பகுதியைச் சேர்ந்தவை. இவற்றுள் புத்தர் சிலைகள், இந்து கடவுட்சிலைகள், சில கிறிஸ்து மதம் சார்ந்த பொருட்கள் என்பன அடங்குகின்றன.
Read article